1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:34 IST)

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா.. மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் நாளை காணொளி வழியாக அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் இந்த ஆலோசனையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva