1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (08:31 IST)

பிளாஸ்மா சிகிச்சையால் நோ யூஸ்: ICMR எடுத்த அதிரடி முடிவு!

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை பலன் அளிக்காததால் இதனை ICMR கொரோனா சிகிச்சை முறைகளில் இருந்து நீக்கியுள்ளது. 

 
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கவில்லை. 
 
ஆம், இறப்பு விகிதத்தையும் பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது. எனவே, கொரோனா நோயாளிகளுக்கு இனி பிளாஸ்மா சிகிச்சை கிடையாது.