எப்போ முடியும் இந்த கொரோனா? – 24 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 24 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 24,61,191 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1007 பேர் இறந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மொத்தமாக 48,40 ஆக உயர்ந்துள்ளது. 17,51,556 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 6,61,595 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.