திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (09:38 IST)

தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் உள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3 கோடியை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,167 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,89,302 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,62,521 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.