28 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்திய நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,36,925 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 977 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,866 ஆக உயர்ந்துள்ளது. 20,96,664 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6.86 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.