ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:08 IST)

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்.. ராகுல் காந்தி அதிர்ச்சி..!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஒருவர் திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய காண்டீபம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அவர் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவிலும் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மாற்று வேட்பாளர்களை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிற அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது வேட்பமனுவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் என்பவர் போட்டியின்றி தேர்வானார் என்று அறிவிக்கப்பட்டது.

Edited by Siva