ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (08:03 IST)

எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: நாடு தழுவிய போராட்ட அறிவிப்பை வெளியிட்ட 'இந்தியா' கூட்டணி

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.  

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் இதுவரை மொத்தம் 142 எதிர்க்கட்சி எம்பிக்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  அதில் நேற்று மட்டும் 50 லோக்சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை கண்டித்து இந்தியா கூட்டணி டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிசம்பர் 22ஆம் தேதி எம்பிகள் சஸ்பெண்டை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்

Edited by Siva