1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By SInoj
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (14:33 IST)

இந்திய தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்

Election Commision
இந்திய தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகார்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
மேலும், அரசியல் சட்ட 324 வது பிரிவின்படி அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.