1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (22:15 IST)

இறந்த தமிழர் முருகன் மீது என்ன ஒரு பாசம்! இவர்தான் மக்களின் முதல்வர்

உத்தரபிரதேச மாநிலத்தில் 63 குழந்தைகள் இறந்தபின்னரும் அந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் கூறாமல், பழியை யார் மீது போட்டு ஆட்சியை காப்பாற்றலாம் என்று தப்பிக்கும் மனப்பான்மை உள்ள முதல்வர் இருக்கும் இதே நாட்டில்தான் தெரியாமல் ஒரு தவறு நேர்ந்துவிட்டது, அந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி பிராயசித்தம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள முதல்வரும் இருக்கின்றார்.



 
 
ஆம், கேரளாவில் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்த தமிழரான முருகனின் மரணத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், தற்போது தமது மார்க்கிஸ்ட் கட்சி, முருகனின் குழந்தைகள் கல்விச்செலவை முழுவதும் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கேரள அரசு சார்பில் அளிக்கப்படும் உதவிகள் குறித்தும் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கேரள முதல்வரின் இந்த அறிவிப்பு அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது. ஒரு முதல்வராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதராகவும் விளங்கி வரும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.