கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி..!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று தான் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிந்தது. ஆனால் தற்போது திடீரென 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் ரூ.1968.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை இனி 1929.50 என விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவதன் காரணமாக ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் விலைவாசி உயர்வு ஏற்படாது என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதேபோல் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Edited by Siva