வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 நவம்பர் 2020 (16:08 IST)

திருமண ஏற்பாட்டால் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தோழிகள் – பின்னணி என்ன?

கேரளாவில் இரண்டு தோழிகள் திருமணம் செய்தால் நம்மை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் அமிர்தா மற்றும் ஆர்யா. 21 வயதாகும் இவர்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர். இதையடுத்து அமிர்தாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்த போது என்னால் ஆர்யாவை பிரிந்து இருக்க முடியாது அதனால் திருமணம் வேண்டாம் என சொல்லியுள்ளார் அமிர்தா. இதை அவரது குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் திருமண ஏற்பாடு பற்றி ஆர்யாவிடம் சொல்லியுள்ளார் அமிர்தா. அதை அடுத்து அவர் எப்படியும் எனக்கும் திருமணம் செய்து வைத்து நம்மைப் பிரித்து வைத்துவிடுவார்கள் . அதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என சொல்லியுள்ளார். இதையடுத்து தீபாவளிக்கு முன்பதாக இருவரும் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் அன்று இரவு ஏழு மணி ஆகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் அவர்களை தேடிபார்த்து கிடைக்காததால் போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து மூவாற்றுப்புழா ஆற்றங்கரையில் அவர்களின் சடலங்களை போலிஸார் கண்டெடுத்துள்ளனர். உள்ள பாலத்தில் நின்று கை கோர்த்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தோழிகள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.