புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (17:11 IST)

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய காதலன்

மும்பையில் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவியை ஓட்டல் அறையில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.


 

 
மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம் ஜோடி தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவை யாரும் திறக்காததால் மாற்று சாவி கொண்டு கதவை திறந்துள்ளனர். 
 
கதவை திறந்த உடனே உள்ளே இருந்த வாலிபர் ஓட்டம் பிடித்துவிட்டார். அவருடன் இருந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஓட்டல் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அவரடு உடலில் 5 இடங்களில் கத்திக்குத்து இருந்துள்ளது. தற்போது அந்த இளம்பெண் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
 
அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் வாலிபர், இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.