1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (21:25 IST)

வெளிமாநில பயணம் வேண்டாம்; முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 
மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்,
 
மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் ஒரு மாநிலத்துக்குச் செல்லும்போது அம்மாநில அரசுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்துவிட்டு பயணம் செய்ய வேண்டும்.
 
தங்கள் பயணத்தின் திட்டம் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டே பயணம் மேற்கொள்ள வேண்டும். பிற மாநிலத்துச் செல்லும் முதல்வருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்தந்த மாநிலங்களின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.