திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (15:22 IST)

நிலவை மேலும் நெருங்கியது சந்திரயான்-3.. இஸ்ரோவின் முக்கிய அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவை நெருங்கி வரும் நிலையில் தற்போது இந்த விண்கலம் மேலும் நிலவை நெருங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
சந்திராயன் 3 விண்கலத்தின் நிலவு சுற்று வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிலவின் சுற்றுப்பாதை 174 கிலோமீட்டர் x 140 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
அடுத்த சுற்று பாதை குறைப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. எனவே நிலவில் தரையிறங்கும் சந்திராயன் 3 விண்கலத்தின் நேரம் நெருங்கி விட்டதாகவே கூறப்படுகிறது.
 
Edited by Mahendran