புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:35 IST)

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் நிறைவேற்ற கோரி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால், இதை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை.
 
இதனால் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தார் ஆனால், எதற்கும் பலனில்லை.  
 
எனவே, 2019ல் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.
 
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் தனது கட்சியினர், பிற கட்சியினர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.