இந்து பெண்கள் மீது கை வைத்தால் வெட்டி எறியுங்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்து பெண்கள் மீது கை வைத்தால் அவர்கலின் கைகளை வெட்டி எறியுங்கள் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜக அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பாஜக மேலிடம் இவ்வாறு பேசக்கூடாது என எவ்வளவு கூறினாலும் இவர்கள் கேட்டபாடில்லை.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மாதாபுராவில் இந்து அமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் இந்துபெண்கள் மீது கை வைத்தால் அவர்களின் கைகளை வெட்டி எறியுங்கள் என ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அமைச்சர் ஏற்கனவே இதே போல் பல சர்ச்சைக் கருத்துக்க்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.