ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (10:26 IST)

பறவைக்காய்ச்சல் பீதி… மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ள மத்திய அரசுக்குழு!

இந்தியாவில் 16 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கோழிகள் வாத்துகள் மற்றும் காகம் ஆகியவற்றுக்குப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து பறவைக் காய்ச்சலைக் கட்டுபடுத்த கட்டுப்பாட்டு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. அதையடுத்து இப்போது அந்த குழு மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோயியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.