தமிழகத்துக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் வருகை!

Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (10:26 IST)

தமிழகத்துக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கொவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழகத்துக்கு முதல்கட்டமாக தமிழகத்துக்கு ஏற்கெனவே5 லட்சத்து 36,500 டோஸ் கோவிஷீல்டு, 20 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பு மருந்து மத்திய அரசால் அனுப்பப் பட்டது. அதையடுத்து இப்போது இரண்டாம் கட்டமாக
5 லட்சத்து 8,500 டோஸ்
கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இதில் மேலும் படிக்கவும் :