வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் நோட்டம்: பின்வாங்கிய மத்திய அரசு!
கடந்த சில மாதங்களாக குழந்தை கடத்த வந்தவர்கள் என கூறி அப்பாவி மக்களை பலர் அடித்து கொன்ற சம்பவம் அதிகம் நடந்தது. இதற்கு வாட்ஸ் ஆப்பில் பரவிய போலி செய்தியே காரணமாக அமைந்தது.
இது போன்ற போலி செய்களால் பட இன்னல்கள் ஏற்படுவதால், மக்கள் பாதிப்படைகிறார்கள் என மத்திய அரசு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சமூக வலைதள கண்காணிப்பு மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
ஆனால், இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மொஹுவ மொய்திரா வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது தனி நபர் உரிமையை பரிக்கும். இது பொதுமக்களின் சுதந்திரத்தை பரிப்பதாகும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் மத்திய அரசு இந்த அறிவிப்பை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.