செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (13:44 IST)

பேரிடர் காலங்களில் மேலும் ஒரு வரி –மத்திய அரசு ஆலோசனை

இயற்கை சீற்றங்கள் போன்ற பேரிடர் காலங்களில் ஜிஎஸ்டியோடு கூடுதலாக மேலும் ஒரு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை.

டெல்லியில் நேற்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. அதில் பேரிடர் காலங்களில் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டும் வகையில் ஜிஎஸ்டி யுடன் கூடுதலாக வரி விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கேரளாவில் வரலாறு காணாத அள்வில் மழை பெய்து லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது கேரளா. கூடுதல் நிதிக்காக சிலப் பொருட்கள் மேலும் சேவைகள் மீதும் அதிக வரி விதிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது.

இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டு அது சம்பந்தமாக முடிவெடுக்க 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பேரிடர்களை அதிகமாக சந்திக்கும் வடகிழக்குப் பகுதிகளை சார்ந்த பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் சில ஆடம்பர பொருட்கள் மீது புதிய வரி விதிக்கலாமா என விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.