1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (09:50 IST)

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படுத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள்

இன்று இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்வு ஆரம்பமாகும் என்றும் மாணவர்கள் 9.30 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 7 மணி முதலே மாணவர்கள் மையத்தில் குவிந்து வந்தனர்
 
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்கள் கைகள் உள்பட உடலில் எந்த பகுதியிலும் அணிகலன்கள் அணிய சிபிஎஸ்இ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக கைகளில் கட்டியிருக்கும் மதம் சார்ந்த கயிறுகளை சிபிஎஸ்இ அதிகாரிகள் பிளேடால் அறுத்து வருகின்றனர்.
 
சிபிஎஸ்இ அதிகாரிகள் அவசர அவசரமாக பிளேடால் இந்த கயிறுகளை அறுப்பதால் பல மாணவர்களின் கைகளில் பிளேடு பட்டு ரத்தக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் ரத்தக்காயத்துடன் தேர்வு எழுதவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.