புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (07:12 IST)

3,250 ரூபாய் கடன் விவகாரம்: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் சி.இ.ஓ மீது சிபிஐ வழக்கு

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார், கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்குவதற்கு அவர் சலுகை காட்டியதாகவும், இந்த சலுகைக்கு பரிகாரமாக அவரது கணவரின் நிறுவனங்களுக்கு முதலீடு கிடைத்ததாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து சந்தா கோச்சார் பதவி விலகியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் துாத் ஆகிய மூவருக்கும் எதிராக, சி.பி.ஐ., தரப்பில், நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி  நேற்று மும்பையில் உள்ள வீடியோகான் தலைமை அலுவலகத்தில் அதிரடியாக, சி.பி.ஐ., சோதனையும் நடத்தியது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களை சிபிஐ இன்னும் வெளியிடவில்லை.

வீடியோகான் நிறுவனம் பெற்ற இந்த ரூ.3250 கோடி கடனில் 85 சதவீதத்தை வீடியோகான் நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் இந்த கடன் வாராக்கடன் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.