1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (17:50 IST)

காவல்துறை தேர்வில் பங்கேற்றவர்கள் உடம்பில் எஸ்சி எஸ்டி மார்க்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவல்துறை பணிக்காக தேர்வில் கலந்துக்கொண்டவர்களின் உடம்பில் எஸ்டி, எஸ்சி என்று மார்க் செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

                                                                          நன்றி: ANI
மத்தியப்பிரதேசம் தர் மாவட்டத்தில் சமீபத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 
 
அப்போது கலந்துக்கொண்டவர்களின் மார்பில் சாதி பிரிவுகள் குறிப்பிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையின்போது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு சில சலுகைகள் உள்ளன. அது தேர்வில் பங்கேற்போருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு குறியீடு போடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.