1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (13:07 IST)

எருமை மீது பேருந்து மோதிய வழக்கு.. 28 ஆண்டுக்கு பின் பேருந்து ஓட்டுனருக்கு சம்மன்,..!

28 ஆண்டுகளுக்கு முன்னால் எருமை மாடு மீது பேருந்து மோதியதால் அந்த எருமை மாடு உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கிற்கு தற்போது அந்த பேருந்து ஓட்டுனருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர பிரதேச மாநிலத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுனர் அக்சான் என்பவர் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் எருமை மாடு உயிர் இழந்தது. 
 
இந்த நிலையில் தற்போது 83 வயதான அந்த ஓட்டுனர் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த பேருந்து ஓட்டுநர் சம்மனை பார்த்து போலீசாரிடம் கண்ணீர் சிந்தியதாகவும் என்னால் எப்படி நீதிமன்றத்திற்கு வரமுடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது. 
 
ஆனால் நீதிமன்றத்திற்கு கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் கைது வாரண்ட் பிறப்பிப்பார்கள் என்றும் போலீசார் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran