1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (15:23 IST)

திருமண மேடையில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. மரத்தில் கட்டி வைத்த உதைத்த பெண் வீட்டார்..!

திருமண மேடையில் வரதட்சனை கேட்ட மாப்பிள்ளையை பெண் வீட்டார் மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் அமர்ஜீத் என்பவருக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்னால் வரதட்சணை பற்றி எதுவும் கேட்காத மணமகன் திடீரென மணமேடையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் வரதட்சணை கேட்டதாக தெரிகிறது. 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார் மணமகனை திருமண மண்டபத்தின் அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணமகனை விட்டு விடும்படி மணமகன் வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை 
 
இதனை அடுத்து போலீசார் வந்து இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வனமகன் அமர்ஜித்திடமும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva