1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (19:50 IST)

கர்நாடக தேர்தல்: பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் காமெடி நடிகர்..!

கர்நாடக மாநில தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்கள் பாஜக வேட்பாளர்களுக்கும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகாஜூனே கார்கே உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடிகர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சுதீஷ், நடிகர் சிவராஜ்குமார் உள்பட பலரும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் தற்போது பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் கலந்து உள்ளார். 
 
அவர் கர்நாடக மாநிலத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் சிக்பலாபூர் என்ற தொகுதியில் பிரச்சாரம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran