1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (15:54 IST)

காதலிக்க மறுத்த மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்

காதலிக்க மறுத்த மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்

காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



 

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தப்பால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் சந்தீப் மாலன் (19) என்ற மாணவர் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் மாணவி நேகா (18) என்பவரும் அவருடன் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் அலிகார் அருகில் உள்ள பக்கத்து பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்புடன் பழகி வந்தனர். இதை தொடர்ந்து, சந்தீப் நேகாவின் மீது காதலில் விழுந்துள்ளார். தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, நேற்று மதியம் கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்த வகுப்பறைக்குள் புகுந்த சந்தீப், மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் நேகாவின் தலையை நோக்கி சுட்டார். இதில் மாணவி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். பிறகு  சந்தீப்பும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே மாணர்களும் ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.