திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (12:18 IST)

ஏப்ரல் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய சர்வதேசப் பயணமாக இந்தியா வர இருக்கிறார். கடந்த ஜனவரி மாதமே இந்த பயணம் நிகழ இருந்த நிலையில் அப்போது இங்கிலாந்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்ததால் தள்ளிப்போனது. இப்போது ஏப்ரல் இறுதியில் அவர் இந்தியா வருவதற்கான வேலைகள அந்நாட்டு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.