1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:26 IST)

இளம் பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு: கருத்தடை மாத்திரையால் விபரீதம்..!

இளம் பெண் ஒருவர் கருவுறாமல் இருப்பதற்காக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும் அதன் காரணமாக அவரது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு மட்டும் இருந்ததாக கூறப்படுவது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த அவர் மருந்து கடையில் அவ்வப்போது கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம் பெண்ணுக்கு பாதி அளவு கரு மட்டும் கலைந்ததாகவும் இதனை அடுத்து சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு ஸ்கேன் செய்து மருத்துவர்கள் பார்த்தபோது குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் வயிற்றில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்பு கூட்டை அகற்றினர்.

தற்போது இளம் பெண்ணாக நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தாங்களாகவே கருத்தடை மாத்திரை சாப்பிடுவது விபரீதத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran