திங்கள், 21 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (09:32 IST)

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் போலி மிரட்டல்கள்!

Flight

இந்தியாவில் விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று மட்டும் 24 விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா முழுவதும் பல முக்கிய நகரங்கள் வழியாக உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் பல நடந்து வருகின்றன. சமீப காலமாக இந்த விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்கள் விடப்படுவதும் சோதனை நடத்தும்போது அவை போலி மிரட்டல்கள் என தெரிய வருவதும் அதிகரித்துள்ளது.

 

அவ்வாறாக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவின் வெவ்வேறு விமான நிலையங்களில் மொத்தம் 24 விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஸ்தாரா, ஏர் இண்டியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவன விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் சோதனையில் வெடிக்குண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
 

 

தொடர்ந்து இவ்வாறு போலி வெடிக்குண்டு மிரட்டல்களால் பயணிகள் பீதி அடைவதுடன், விமான சேவைகளும் தாமதமாகி வருவது பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. இது தொடர்பாக பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் மோகன் நாயுடு, உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K