புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (13:41 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

arvind kejriwal
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா புதிய முதல்வர் குறித்து கூறியபோது, ‘மணிஷ்  சிசோடியாவின் அழுத்தம் காரணமாகவே அரவிந்த் கெஜ்ரிவால், தனது விருப்பமான ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய முடியவில்லை என்றும்,  கெஜ்ரிவால் விருப்பமின்றி அதிஷியை முதல்வராக தேர்வு செய்ய ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் வரை, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர் முதல்வராக செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.

இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அமைச்சர் அதிஷி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றி பேசும்போது, டெல்லி பாஜக தலைவர் சச்தேவா, “அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பமின்றி அதிஷியை முதல்வராக்கியுள்ளார். மணீஷ் சிசோடியாவின் அழுத்தம் காரணமாகவே அவர் விரும்பியவரை தேர்வு செய்ய முடியவில்லை. சிசோடியாவே அதிஷிக்கு அனைத்து முக்கிய துறைகளையும் ஒப்படைத்துள்ளார். முகம் மாறினாலும், ஊழல் மாற்றமின்றி தொடரும். இதுகுறித்து டெல்லி மக்கள் கேள்வி எழுப்புவார்கள்" எனத் தெரிவித்தார்.

Edited by Mahendran