வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (20:03 IST)

தேர்தல் நடத்தாமலே வெற்றிபெற்ற பாஜக எம்.பி! – உ.பியில் சுவாரஸ்யம்!

உத்தர பிரதேச ராஜ்யசபா இடைத்தேர்தலில் தேர்தல் நடக்காமலே பாஜக வேட்பாளர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்திய மந்திரியும், பாஜக முக்கிய தலைவருமான அருண் ஜெட்லி ஆகஸ்டு மாதம் உடல்நல குறைவால் காலமானார். ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்த அருண் ஜெட்லி காலமானதால் அவரது பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் இடத்துக்கு பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்தல் அக்டோபர் 16 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற பாஜகவினர் அனைவரும் சுதான்ஷுவை ஒரு மனதாக எம்.பியாக வழிமொழிந்ததால் போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.