வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (08:21 IST)

பாஜக எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார்?

உத்தரபிரதேச மாநிலத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் யோகேஷ் வர்மா  நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏவை சுட்டு விட்டு தப்பி ஓடினார்.

இதனால் எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது எம்.எல்.ஏவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உபி மாநில போலீசார், எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.