செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (14:21 IST)

மோடியை புகழ்ந்து தள்ளும் பாஜக அமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடி போன ஜென்மத்தில் கிருஷ்ண பகவானாக அவதரித்தார் என பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ளார்
ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் தேவ் அகுஜா சமீபத்தில் சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில் பசுவதை செய்வோரை கொடூரமாக கொல்ல வேண்டும் என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து சமீபத்தில் தேவ் அகுஜா, ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். மோடிக்கு பல்வேறு திறமைகள் இருப்பதாகவும், அவரது திட்டங்கள்(பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி) மக்களுக்கு தற்பொழுது இடையூறாக இருந்தாலும், பிற்காலத்தில் அது நல்ல பலன்களை அளிக்கும் என்றார். மோடியின் நல்லாட்சியால், வரும் மக்களைவை தேர்தலில் அவர் மகத்தான வெற்றியடைவார் என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி போன ஜென்மத்தில் கிருஷ்ண அவதாரம் எடுத்தார் என்று கூறியுள்ளார்.