1975-ல் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தவர் பிரதமர் தான், ஜனாதிபதி அல்ல. பாஜக விளக்கம்
1975 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை திறந்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தான் என்றும் ஜனாதிபதி அல்ல என்றும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.
மே 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி தான் இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பாஜக இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை திறந்து வைத்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தான் அன்றைய குடியரசு தலைவர் பக்ருதின் அலி அல்ல என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் 1987 ஆம் ஆண்டு பாராளுமன்ற நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தான் அன்றைய பிரதமர் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் அல்ல என்றும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.
Edited by Siva