வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:09 IST)

சோனியா காந்தியை அம்மனாக சித்தரிப்பதா? பாஜக கடும் கண்டனம்..!

சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து காங்கிரஸ் கட்சியினர் கட் அவுட் வைத்துள்ள நிலையில் அதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில்  நேற்று அக்காட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. 
 
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுக்கள் வைத்திருந்த நிலையில் சோனியா காந்தியின் அம்மன் கட் அவுட் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.  
 
இது குறித்து பாஜகவினர் தெரிவித்த போது சோனியா காந்தியை தெலுங்கானாவின் அன்னை என சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயலாகும் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தேவதை உள்ளது பாரதம் முழுவதும்  சக்தி பெண் வடிவம் என்று வழிபட்டு வருகிறது. ஆனால் ஊழல் செய்த காங்கிரஸ் தலைவரை தெலுங்கானாவின் அன்னை என சித்தரிப்பது தவறான செயல் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran