செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (11:09 IST)

நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாயமாகும் இளைஞர்.. போலீசார் வலைவீச்சு..!

நடு ரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாயமாகும் இளைஞரை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் கடந்து சில நாட்களாக சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு திடீரென முத்தம் கொடுத்துவிட்டு ஒரு இளைஞர் மாயம் ஆகி வருகிறார் 
 
இதனால் பெண்கள் ரோட்டில் நடமாடுவதற்கே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள ஜமோய் என்ற மாவட்டத்தில் நடைபெறும் இந்த சம்பவம் காரணமாக பெண்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பெண்களுக்கு முத்தம் கொடுத்த இளைஞரை தேடும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்னும் ஒரிரு நாளில் அந்த இளைஞர் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran