ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (16:05 IST)

மது அருந்தியவர்களுக்கு பீகாரில் இடமில்லை! – முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்!

பீகாரில் வெளிமாநிலத்திலிருந்து மது அருந்தி விட்டு வந்தால் கூட அனுமதியில்லை என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் முழு மதுவிலக்கு அமலில் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் உள்ளது. மாநிலத்திற்குள் கள்ள சாராயம் காய்ச்சினாலோ, வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கடத்தி வந்து விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மது அருந்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுவிலக்கு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் நிதிஷ்குமாரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தோர் மது அருந்திவிட்டு பீகாருக்குள் நுழைவதற்கு அனுமதி அளிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் “மாநிலத்திற்கு வருபவர்கள் கொஞ்சமாவது மது அருந்த அனுமதி கொடுங்கள் என்கிறார்கள். ஆனால் அது சாத்தியமா? பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை மது அருந்த அனுமதிப்பீர்களா எனக் கேட்டால், அப்படிப்பட்டவர்கள் பீகாருக்கு வராதீர்கள் என்பேன். மது அருந்துபவர்கள் பீகாருக்கு வர வேண்டிய அவசியமில்லை” என காட்டமாக தெரிவித்துள்ளார்.