வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:50 IST)

நிதிஷ் குமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: துணை முதல்வருக்கும் வாழ்த்து!

nitiesh kumar
எட்டாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இன்று மீண்டும் அவர் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ் கட்சியின் தேஜஸ்வி பதவி ஏற்றுள்ளார் 
 
இந்த நிலையில் பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் துணை முதல்வராக பதவியேற்ற தேஜஸ்வி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
பாஜகவுக்கு எதிராக செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக அணியில் இருந்து வெளியே வந்த நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது