வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (11:56 IST)

காருக்குள் வைத்து இரண்டரை மணி நேரம்?: நடிகை பாவனாவின் குமுறல்!

காருக்குள் வைத்து இரண்டரை மணி நேரம்?: நடிகை பாவனாவின் குமுறல்!

நடிகை பாவனா கார் டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது. பலரும் இந்த சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் தன்னை கடத்தியவர்கள் காருக்குள் வைத்து இரண்டரை மணி நேரம் செய்த கொடுமை குறித்து நடிகை பாவனா காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும் நடிகை பாவனா திருச்சூரிலிருந்து கொச்சிக்கு கிளம்பினார்.
 
லால் கிரியேஷன்ஸ் வழங்கிய காரில் பயணித்தபோது கார் ஓட்டுநர் மார்ட்டின் பல எஸ்எம்எஸ்களை யாருக்கோ அனுப்பியுள்ளார். அந்த தகவல்களின் அடிப்படையில் வேன் ஒன்று பாவனாவின் காரைப் பின்தொடர்ந்துள்ளது. அந்த வேன் இரவு 8.30 மணிக்கு நெடும்பசேரி விமான நிலைய சந்திப்பின் அருகே பாவனா வந்த கார் மீது மோதியது.
 
கார் நின்றதும் இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காருக்குள் புகுந்து பாவனாவின் வாயை அடைத்துள்ளனர். சத்தம் போடாதே என மிரட்டி பாவனாவின் செல்போனை பிடுங்கியுள்ளனர் அவர்கள். கலமசேரி என்கிற இடத்தில் ஒருவர் காரிலிருந்து இறங்கியுள்ளார். பின்னர் இன்னொருவர் காருக்குள் புதிதாக ஏறியுள்ளார்.
 
பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்ய அந்த நபர் மற்றவர்களுக்கு உதவியுள்ளார். பின்னர் மேலும் 2 பேர் காருக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் எனப்படும் சுனில் குமார் வீட்டுக்கு காரை கொண்டு சென்றார்கள்.
 
அங்கு முகத்தை மூடியபடி காருக்குள் நுழைந்த சுனில் காரை ஓட்டி வந்த மார்ட்டினை வெளியேற்றிவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தார். காகநாடு பகுதிக்கு காரைக் ஓட்டி சென்ற சுனில் அங்கு பாவனாவை பலாத்காரம் செய்துள்ளார்.
 
பின்னர் சுனில் வேறு யாருக்காகவோ பாவனாவைப் பல்வேறு விதங்களில் புகைப்படமாகவும் வீடியோகவும் எடுக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு பாவனா ஒத்துழைக்காததால் அவரைக் துன்புறுத்தியுள்லார். பின்னர் காரிலிருந்து பாவனா வெளியேற்றப்பட்டார். இவ்வாறு பாவன அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.