செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:55 IST)

நடுவானில் இன்ஜின் கோளாறு 176 பயணிகளுடன் தப்பிய விமானம்

பெங்களூரில் இருந்து துபாய் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு டெல்லியில் தரயிறக்கப்பட்டது. இதில் பயணித்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.



 
பெங்களூரில் இருந்து இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது விமானம் டெல்லி அருகே பறந்து கொண்டிருந்தது.
 
உடனே விமானம் அவசரமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. காலை 8.45 மணிக்கு விமானம் தரை இறக்கப்பட்டது. டெல்லியில் பயணிகளை மீட்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டதால், அதில் பயணித்த 176 பயணிகள் விபத்தில் இருந்து தப்பினர்.
 
இச்சம்பவத்தால் காலை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.