வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (18:36 IST)

கன்னட மொழியில்தான் வங்கிச் சேவை- அரசு முடிவு?

Siddaramaiah
கர்நாடக மாநிலத்தில் இனிமேல் கன்னட மொழியில்தான் வங்கிச் சேவை நடைபெற வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கர்நாடகம் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

தற்போது கர்நாடகம் மாநிலத்தில்  சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இனிமேல் கன்னட மொழியில்தான் வங்கிச் சேவை நடைபெற வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், கர்நாடகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களும் கன்னட மொழியில்தான் சேவை வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர முடிவெடுத்துள்ளதாகவும், பல கிராமங்களில் உள்ள வங்கிகள் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் அரசு இந்த முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.