சர்ச்சை பதிவிற்கு மன்னிப்பு கேட்ட அசாம் முதல்வர்
அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாரதிய ஜனத கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
அசாம் மா நிலத்தின் 15வது முதல்வராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி இவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்.
இந்த நிலையில், இவரது ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இவர் பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை என்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் பிஸ்வா சர்மாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை என சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.