திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 4 மே 2024 (17:03 IST)

பாஜகவில் இணைந்த அரவிந்தர் சிங் லவ்லி.! காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம்..!!

Aravindar Singh
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இன்று இணைந்தார். மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் அவர் ஐக்கியமானார்.
 
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் உள்ளோர் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் கூறி டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த அரவிந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இதை எடுத்து டெல்லி கங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அரவிந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் அவர் ஐக்கியமானார்.