மனைவியின் கிட்னியை விற்று சொகுசாக வாழ்ந்த கணவர் கைது!
மனைவியின் கிட்னியை திருடி விற்று இந்தியாவுக்கு வந்த கணவன் உல்லாச வாழ்க்கை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச நாட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் உள்ள மல்ககான் கிரி மாவட்டத்திற்கு வந்தவர் பிரசாந்த்(34).
இவர், வங்கதேசத்தில் இருக்கும்போது, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ரஞ்சிதா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியர்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சிதாவுக்கு வயிற்று வலி ஏற்படவே, அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ஒரு கிட்னி காணாததைக் கூறியுள்ளனர்.
அப்போது, யோசித்துப் பார்த்த ரஞ்சிதா 4 ஆண்டுகளுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்தது ஞாபகம் வந்தது. பின், ர பிரஷாந்திடம் அவர் விசாரித்தபோது, அவர் கிட்னியை விற்றது தெரியவந்தது.
அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்த போது, செலவுக்குப் பணம் வேண்டி, மனைவியின் கிட்னியை விற்க வேண்டி, வயிற்றில் கல் எடுப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்ய வலியுறுத்தியுள்ளார்.
இததுகுறித்து, அவர் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவே, தற்போது, பிரஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.