வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2016 (10:56 IST)

ஓடும் ரயிலில் பெண்ணின் அங்கங்களை தொட்டு கழிவறைக்கு அழைத்த சட்டமன்ற உறுப்பினர்!

ஓடும் ரயில்லில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அங்கங்களை தொட்டதோடு, அந்த பெண்ணை ரயில் கழிவறைக்கு அழைத்த பீகார் சட்டமேலவை பாஜக உறுப்பினர் ரயில்வே காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
பீகார் மாநிலம் சட்டமேலவை உறுப்பினர் துன்னா பாண்டே. பூர்வாஞ்சல் விரைவு ரயிலில் பயணம் செய்த இவர், துங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அங்கங்களை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணை ரயில் கழிவறைக்கும் அழைத்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. பீகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நான் செல்போன் சார்ஜரை எடுக்க முயன்றபோது அந்த பெண் மீது தவறுதலாக கை பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள துன்னா பாண்டே இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது பாஜக. இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.