திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (19:31 IST)

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: 3 மாத குழந்தை உட்பட 8 பேர் பலி; பலர் படுகாயம்!!

மும்பையின் புறநகர் பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 


 
 
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான கட்கோபாரின் தாமோதர் பூங்கா பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. 
 
இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்று பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.