1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (19:45 IST)

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல்: இந்திய ராணுவ மேஜர் பலி

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படையினர் தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் இந்திய மக்கள் மீண்டு வராத நிலையில் மேலும் இரண்டு தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி இந்திய ராணுவ மேஜர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
 
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரி மாவட்டத்திலும், நவுசேரா செக்டார் என்ற பகுதியிலும் இன்று அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஒருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவுசேரா செக்டார் பகுதி என்பது இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள பகுதியாகும். 
 
அடுத்தடுத்து இந்திய ராணுவத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருவதால் உடனடியாக இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது.