வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (18:14 IST)

உள்துறை அமைச்சராகும் அமித்ஷா: தேசிய தலைவராகும் ராஜ்நாத்சிங்

17வது மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கின்றது. இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த முறை அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இதுவரை அமைச்சரவையில் இடம்பெறாமல் பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்பார் என்றும், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத்சிங் தேசிய தலைவராவார் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் சுஷ்மா ஸ்வராஜூக்கு பதில் ஒரு புதிய பிரபலம் வெளியுறவுத்துறை அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும், கவுதம் காம்பீர் விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் நிர்மலா சீதாராமன் உள்பட முக்கிய அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது