முதலமைச்சர் வாகனத்துக்கு வழிவிட நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்: பெண் பலி
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்காக வழிவிட சாலை போக்குவரத்தை நிறுத்தியதில், ஆம்புலன்ஸில் இருந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்கோட் பகுதியில் கடந்த 25ஆம் தேதி சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்கு வழி விட சாலை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அதில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கி உள்ளது.
பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்ற போது, அதிலிருந்த வயதான பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு நபர் சமுக தளத்தில் பதிவு செய்துள்ளார்.